தமிழகத்தின் மின்னணு உற்பத்தித் துறையில் சர்வதேச நிறுவனங்களின் கவனம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி சேவை நிறுவனமான சோல்னர் எலெக்ட்ரானிக் ஏஜி (Zollner Elektronik AG), சென்னையில் தனது உற்பத்தித் திறனை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்தியாவைச் சேர்ந்த அவலான் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல் முறையாக ஜெர்மனிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ஜெர்மனியின் முனிச் நகரில் இரு நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் தமிழக அரசுத் தரப்பில் ஆலோசனை நடத்தினார். சென்னையில் தொழில்துறை மின்னணுப் பொருட்கள் மற்றும் குறைக்கடத்தி உற்பத்திக்கான கருவிகளின் முழுமையான தொகுப்பு உற்பத்தி உள்ளிட்ட உயர்தரத் தொழில்நுட்ப