தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடத்திய மூன்று தென்கொரிய நிறுவனங்கள், தற்போது ஆந்திராவுக்கு முதலீட்டை மாற்றியுள்ளன. ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் குவாசின், சியோயான் மற்றும் ஐவாமேட் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஆந்திராவில் ₹1,614 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி அனந்தப்பூரில் குவாசின் நிறுவனம் ₹850 கோடியிலும், சியோயான் நிறுவனம் ₹514 கோடியிலும், ஐவாமேட் நிறுவனம் ₹250 கோடியிலும் தொழிற்சாலைகளை அமைக்க உள்ளன. இதன் மூலம் மொத்தம் 1,418 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கடந்த ஜூலை மாதம் தென்கொரியா சென்று நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து இந்த முதலீடுகள் உறுதியாகியுள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் ஆலோசனைகள் நடத்திய இந்நிறுவனங்கள் ஆந்திராவைத் தேர்வு செய்திருப்பது