மதுரையில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல்குமார் பேசினார்.
மதுரையில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "SAY NO TO DRUGS" என்ற விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. தமிழக அமைச்சர் C.T.R. நிர்மல் குமார் இதில் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். போதைப்பழக்கத்தின் ஆபத்துகள் மற்றும் போதையற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்புக்கே முன்னுரிமை என அமைச்சர் தெரிவித்தார்.