பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என ஏராளமானவர்கள் சென்னையின் பொது போக்குவரத்தையே நம்பி உள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை, பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் போக்குவரத்துகளாக, பேருந்து மற்றும் புறநகர் ரயில்கள் உள்ளன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை மின்சாரப் பேருந்துகளாக உள்ளன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சாரப் பேருந்துகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வகையில், சென்னையில் கடந்த 2025-ஆம் ஆண்டு மின்சார பேருந்துகள் தனியார் நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்டு மாநகர போக்குவரத்து கழகத்தில் இணைக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்னையில் பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இந்தநிலையில், டீசல் பேருந்துகளை மின்சாரப் பேருந்துகளாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சென்னை