மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றிபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தாராபுரம் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் பேசியதில் தடுமாற்றம் இருந்ததாகவும், என்ன பேச வேண்டும் என்பதில் அவருக்குக் குழப்பம் நிலவுவதாகவும் அவர் விமர்சித்தார். மகளிருக்கு ரூ.2,500 நிதி உதவி திட்டம் நிறைவேற்றப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் மின்வெட்டு, பால் விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் ‘தூய சக்தி’, ‘தீய சக்தி’ என விஜய் பேசியதற்கு, யார் நல்ல சக்தி என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் பதிலடி கொடுத்தார்.