சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் 'மகாதேவ் கைலாஷ் யாத்ரா' என்ற தனியார் ஆன்மீக சுற்றுலா நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 49 பேர் கடந்த 14 ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து நேபாளம் வழியாக சீன எல்லையில் உள்ள கைலாஷ் யாத்திரைக்கு புறப்பட்டுச் சென்றனர். குரோம்பேட்டை, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, எஸ்.பி.கோயில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தேனி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, சேலம் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த குழுவில் சென்றுள்ளனர் என தெரிய வருகிறது
இவர்கள் யாத்திரையை முடித்துக் கொண்டு நேபாளம், சீன எல்லைப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் இமிகிரேஷன் நடைமுறைகளை மேற்கொண்டிருந்த போது திடீரென