சென்னையின் பொதுப் போக்குவரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம், வியாசர்பாடியில் மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் டெப்போ தொடங்கப்பட்டதிலிருந்து, 120 பேருந்துகளுடன் தொடங்கிய இந்த சேவை தற்போது 625 மின்சார பேருந்துகளாக விரிவடைந்துள்ளது. வியாசர்பாடி, பெரம்பூர், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய 5 டெப்போக்களில் இருந்து மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மின்சாரப் பேருந்துகள் இதுவரை 3 கோடி கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளன. இதன் மூலம் ஒரு கோடி லிட்டருக்கும் அதிகமான டீசல் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் தடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநகரப்