தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி, இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (அக்டோபர் 15) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அவற்றுக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நாளை (வெள்ளிக்கிழமை) மழையின் தாக்கம் மேலும் அதிகரித்து, டெல்டா மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தெற்கு பகுதிகள் மற்றும் வட கடலோர மாவட்டங்கள் உள்பட மொத்தம் 29 மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன்