திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீர், பஞ்சப்பூர் அருகே உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் பல்வேறு பயன்பாடுகளுக்கும், மீதமுள்ளவை ஆற்றுக்கும் விடப்படுவது வழக்கம்.
ஆனால், தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படாத காரணத்தினால், சுத்திகரிப்பு தொட்டிகளிலிருந்து கழிவுநீர் அப்படியே பொங்கி வழியும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்படாமலேயே வெளியேறும் இந்த துர்நாற்றம் மிக்க கழிவுநீர், தற்போது புதிய பேருந்து நிலையம் இயங்கும் பஞ்சப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளும் தீவிர சுகாதார சீர்கேட்டுக்கு ஆளாகும் அபாயம் உருவாகியுள்ளது.
மேலும், பஞ்சப்பூர் பகுதியில் தேங்கி நிற்கும் இக்கழிவுநீர் அப்படியே கோரையாற்றில்