புரட்டாசி மாதத்தில் தமிழ்நாட்டின் நிலை எப்படி இருக்கும்? இந்திய அளவில் கவனம் பெறக்கூடிய முக்கிய சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுமா? புரட்டாசி மாதத்திற்கான ஜோதிட பார்வை மற்றும் பல்வேறு கணிப்புகளை டாக்டர் அம்மன் அருள் பழனிநாதன் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். ”கடக ராசியில் உச்சம் பெற்றுள்ள குரு பகவான் இந்தியாவில் புரட்டாசி மாதத்தில் நீதித்துறை காப்பாற்றுவார். உயர்கல்வித்துறை, வங்கி துறை ஆகியவையும் மேன்மை காணும். சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரிக்கும். தானிய இருப்பு அதிகமாகும் என்பதால் நாட்டில் பெரும்பாலும் பஞ்ச பிரச்சனை இருக்காது. புரட்டாசி மாதத்தில் மாநிலங்களுக்கு இடையில் நில தகராறுகளும் நதி நீர் தொடர்பான தகராறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரிய நிறுவனங்கள் தங்கள் அலகுகளில் எந்தவித விபத்துகளும் ஏற்படாமல் இருக்க