சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் முக்கியமான ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர் வரும் கால்வாய்கள் மற்றும் ஏரியை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டது. மொத்தம் 16 இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதில், பல முக்கிய அளவீடுகள், நிர்ணயிக்கப்பட்ட தரத்தைவிட மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, உயிர்வேதியியல் ஆக்சிஜன் தேவை எனப்படும் BOD அளவு மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளது. இதன் நிர்ணயிக்கப்பட்ட அளவு 30 மில்லிகிராம். ஆனால், ஒரு இடத்தில் 132 மில்லிகிராமாகவும், மற்றொரு இடத்தில் 61 மில்லிகிராமாகவும் பதிவாகியுள்ளது. மேலும், இரண்டு இடங்களில் 34 மற்றும் 33 மில்லிகிராம் அளவிலும் பதிவாகியுள்ளது.
அதேபோல், நீரில் இருக்க வேண்டிய கரைந்த