பெண்கள் இச்சமூகத்தில் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். மனதளவிலும், உடலளவிலும் பல பாதிப்புகளை சந்திக்கிறார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக உள்ளது. எனவே, இவற்றிற்கு என்ன காரணம், அதிலிருந்து விடுபட என்ன செய்யலாமென பாரம்பரிய சித்ந வர்ம மருத்துவர் செந்தில்குமார் ஆலோசனை அளித்துள்ளார்.
"பெண்கள் மிகவும் பலமானவர்கள். அவர்களால் முடியாதது எதுவும் இல்லை. ஒரு பெண் மனது வைத்தால்தான் ஆண் ஆணாக கருதப்படுகிறான். பெண் இல்லாமல் ஆண் உலகில் வர முடியாது. பெண்களை பற்றிய கருத்துக்களை மாற்ற வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் மிக வலிமையானவர்கள். எனக்கு தெரிந்த பலர் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு பெண் உள்ளார். அவர் கராத்தே, குங்ஃபு என அனைத்திலும் கைதேர்ந்தவர். அவரது வீட்டிற்கு ஒரு நாள்