குழந்தைப் பெற்ற பிறகு தாருமாறாக மாறும் உடல் தோற்றத்தை எப்படி இளைமைக் குறையாமல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதென பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் ஆலோசனை வழங்குகிறார்.
'குழந்தை பிறந்த பிறகு பெண்கள் தங்கள் உடலை எப்படி பழைய நிலைக்கு கொண்டுவருவது? குழந்தை பிறந்தவுடன், வயிறு பெரிதாக இருக்கும். ஆனால், அந்த வேளையில் தேவைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. குழந்தை பிறந்து ஒரு வாரம் கழித்து சிறிய சிறிய யோகாசனங்களை செய்யலாம். குழந்தை பிறந்துவிட்டால் உடல் பெருகிவிடும் என எண்ண வேண்டாம். ஆனால், மருந்துகளை உட்கொள்வது மிக தவறு.
ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது, யோகாசனம் செய்வது, மனதளவில் சுறுசுறுப்பாக இருப்பது, உடல் செயல்பாடுகளை இயல்பாக வைத்திருப்பது ஆகியவை மிக அவசியம்' என