மஞ்சள் காமாலை நோய் பிறக்கும் சிசுவிலிருந்து பெரியோர் வரை அனைவரையும் தாக்கும். அலட்சியப்படுத்தினால் அது உயிருக்கே ஆபத்தாகவும் முடியும். இந்நிலையில் அதிலிருந்து நம்மை காக்க பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.
'மஞ்சள் காமாலை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக குழந்தை வயிற்றில் இருக்கும்போது தாய் அதிகமான சூடான உணவுகளை உட்கொண்டால், குழந்தை பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடன் பிறக்கலாம். ஆகையால், குழந்தைகளில் மஞ்சள் காமாலையை தடுக்க தாய்மார்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். எனினும், இதுவும் அதிகமாகிவிடக் கூடாது.
உடல் சமநிலையில் இருப்பது நல்லது. உணவில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். காலையில் குளிர்ச்சியான உணவுகளையும் மதியத்தில் சூடான உணவுகளையும் உட்கொள்ளலாம். பெரியவர்களில் மஞ்சள் காமாலை வந்தால் என்ன செய்ய வேண்டும்?