வயிற்றுப் புண்ணால் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்க பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
'வயிற்றுப் புண்ணால் பலர் அவதிப்படுகிறார்கள். ஆனால் அதை பலரால் சரியாக தெரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகையால், அதை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். வயிற்றுப் புண் இரண்டு வகைப்படும்.
18-20 வயதில் ஒருவருக்கு அல்சர் இருந்தால் அதற்கான காரணம் வேறு. 35-40 வயதுக்கு மேல் வரும் அல்சருக்கு பெரும்பாலும் அதிக மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மிக முக்கியமான காரணமாக இருக்கலாம். சிறு வயதில் அல்சர் வந்தால் அதை எளிதாக குணப்படுத்தலாம். போதுமான தண்ணீர், நீர் ஆகாரம், கீரை வகைகள் ஆகியவை இதற்கு உதவும்.' என்று கூறும் பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் இன்னும் பல முக்கிய ஆரோக்கிய குறிப்புகளையும் அளித்துள்ளார்.