விளையாட்டு வீரர் வீராங்கனையர் உலக அளவில் சாதிக்க..உடலை, மனதைத் தயார் செய்ய பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.
‘விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு எப்படிப்பட்ட உடல்வாகு தேவைப்படும்? விளையாட்டு வீரர்களுக்கு முக்கியமாக 2 விஷயங்கள்தான் தேவை. புரதச்சத்து, மசில் பலம் இவற்றையெல்லாம் தாண்டி உடலும் மனமும் 100% ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிக அவசியம். புரூஸ் லீ சாதாரணமாக இருந்தும் பல சாதனைகளை செய்துள்ளார். அவரது பலமாக இருந்தவை வலிமையும், தைரியமும்தான்.
இவற்றை வளர்க்கத்தான் நான் அறிவுறுத்தல்களை அளிப்பேன். மற்றதெல்லாம் தானாக வந்துவிடும். மன வலிமைக்கும், உடல் வலிமைக்கும் பல வித பயிற்சிகள் உள்ளன. இன்று இவற்றிற்கெல்லாம் பல மருந்துகளும், உணவுகளும் உள்ளன. ஆனால், உடலை ஃபிட்டாக வைத்துக்கொண்டாலே போதும்.
மேலும், யோகாசனம், தியானம்