கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 50 வயதான ராஜேந்திரன், சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் இவர், பொன்னேரியில் இருந்து சென்னை தீவுத்திடல் வரை செல்லும் 56P வழித்தடப் பேருந்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இன்று புதுவண்ணாரப்பேட்டை அருகே பயணிகளுடன் பேருந்தை இயக்கிச் சென்றபோது, எதிர்திசையில் ஆட்டோ ஒன்று வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஆட்டோவை ஓரமாக நிறுத்துமாறு ராஜேந்திரன் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், பேருந்திலிருந்து கீழே இறங்கிய ராஜேந்திரனை ஆட்டோ ஓட்டுநர் கல்லால் தாக்கிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை சக பயணிகள் மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்