ராமநாதபுரம் மாவட்டம் மணிகனேரி பகுதியில் ராமேஸ்வரத்திற்கான புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இட அனுமதி கோரி (Site Clearance) அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது. இதற்காகக் கீழக்கரை அருகேயுள்ள மணிகனேரி கிராமத்தில் சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டு, அங்குள்ள நில அமைப்பு மற்றும் கட்டுமான நிலவரங்கள் குறித்து விரிவான ஆய்வுகளும் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளன. முன்னதாக 2024-ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தது. அதனைத் தொடர்ந்து 2025 மார்ச் மாதத்தில் இதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. உச்சிப்புளி, மணிகனேரி உள்ளிட்ட ஐந்து உத்தேசப் பகுதிகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில்,