சுமதுரா குழுமம், சென்னையில் தனது முதல் திட்டத்தை தொடங்குகிறது. ரெட் ஹில்ஸ் பகுதியில், சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி 52 ஏக்கர் பரப்பளவில், சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் தரம் உயர்ந்த தொழில் மற்றும் தளவாடப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப கட்டமைக்கப்படும் இந்தப் பூங்காவில், சுமார் 12 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிடங்கு வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தை 2028-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய சுமதுரா குழுமம் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே பெங்களூருவின் ஹோஸ்கோட்டே பகுதியில், 25 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரம் உயர்ந்த தளவாடப் பூங்காவை சுமதுரா குழுமம் செயல்படுத்தி வருகிறது. இதில் நிப்பான் எக்ஸ்பிரஸ், அமேசான், செப்டோ, ஸொமேட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள்