சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என இந்திய விமான நிலைய ஆணையமான AAI அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
AAI தலைவர் விபின் குமார் தலைமையிலான குழு, சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளை நேரில் ஆய்வு செய்தது. சுமார் 1,207 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது மந்தமாக நடைபெற்று வருவதால், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தால், சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 3 கோடியே 50 லட்சம் பயணிகளை கையாள முடியும். மொத்தம் நான்கு முனையங்களுடன் விமான நிலையம் செயல்படும். புதிய முனையத்தில் 8 நுழைவு வாயில்கள்,