தமிழகத்தின் நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்தாண்டு திட்டத்துக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக நகர்ப்புற சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்த 50 ஆயிரம் கோடி ரூபாயும், குடிநீர் திட்டங்களுக்கு 30 ஆயிரத்து 350 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயும், நீர்நிலைகள் மறுசீரமைப்பு மற்றும் சமூகக் கட்டமைப்பு வசதிகளுக்கு தலா 2 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பசுமைப் பகுதிகளை உருவாக்கவும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் தலா 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு