தமிழகம் முழுவதும் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 6 ஆயிரத்து 513 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 ஆயிரத்து 221 பணிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 126 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், மாநில நெடுஞ்சாலைகளில் 589 பணிகளுக்கு 2 ஆயிரத்து 722 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், முக்கிய மாவட்டச் சாலைகளில் 419 பணிகளுக்கு ஆயிரத்து 9 கோடி ரூபாயும், இதர மாவட்டச் சாலைகளில் 1,213 பணிகளுக்கு 2 ஆயிரத்து 781 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 446 பணிகள் மூலம் 1,373 கிலோ மீட்டர்