அடுத்த 5 நாட்களுக்கான தமிழக வானிலை முன்னறிவிப்பு மற்றும் மாவட்ட வாரியான மழை நிலவரம் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. ஆனால், பெரிய அளவில் எங்கும் மழை பெய்யவில்லை. சமீபத்தில் வங்கக்கடலில் அக்வான் புயல் உருவானது. ஆனால், தமிழகத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில், நவம்பர் 23 முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.