டாஸ்மாக் கடைகளில் சரக்குகளை இறக்கும் பணியில் நடைபெறும் முறைகேடுகளுக்குத் தடை போடும் வகையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக். நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, சரக்குகளை இறக்கும் பணிக்கு போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கான தொழிலாளர்களைத் தங்கள் சொந்தச் செலவில் நியமிக்க வேண்டும். இந்தப் பணிகளில் டாஸ்மாக் கடை ஊழியர்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடைகளுக்கு வரும் ஒவ்வொரு சரக்குப் பெட்டியையும் கையடக்கக் கருவிகள் மூலம் சரிபார்த்து, பட்டைக்குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகே இருப்பில் சேர்க்க வேண்டும். ஸ்கேன் செய்யப்படாத சரக்குகளைச் சரிபார்ப்பின்றிக் கடைக்குள் எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பணப் பரிவர்த்தனைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சரக்குகளை இறக்கும் தொழிலாளர்களுக்கும் டாஸ்மாக்