ஆட்டோ, கார் பயணிகளுக்கு நியாயமான கட்டணம்... ஓட்டுநர்களுக்கு உரிய வருவாய்... இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. தனியார் நிறுவனங்களின் வாடகை வாகனச் செயலிகளுக்கு மாற்றாக, ஆட்டோ மற்றும் வாடகைக் கார்களுக்கான பிரத்யேக செயலியை தமிழக அரசு உருவாக்க உள்ளது. இதற்கான பணிகளை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையமான CUMTA மேற்கொண்டு வருகிறது. புதிய செயலியை உருவாக்குதல், பராமரித்தல் மற்றும் செயல்படுத்துவதற்கான நிறுவனத்தைத் தேர்வு செய்ய தேசிய அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்ததும் அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்குள் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்படும் என CUMTA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாகச் சென்னை பெருநகரப் பகுதியில் இந்தச் செயலி