தென் சென்னையின் போக்குவரத்து உயிர்நாடியாகத் திகழும் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையின் 2 கிலோமீட்டர் பகுதியை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக ₹450 கோடி மதிப்பீட்டில் 6 வழித்தட உயர்மட்ட மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. துரைப்பாக்கம் ‘சென்னை ஒன்’ சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு முன்பாகத் தொடங்கும் இந்த உயர்மட்டப் பாலம், காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் உள்ள மேம்பாலத்திற்கு 100 மீட்டருக்கு முன்பாகச் சென்று தரையிறங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
சதுப்புநிலத்தின் இயற்கை சூழல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தூண்களின் எண்ணிக்கையைக் குறைத்து, இரண்டு தூண்களுக்கு இடைப்பட்ட இடைவெளியை 200 மீட்டராகவும், ஒவ்வொரு தூணையும் 2.5 மீட்டர் விட்டம் கொண்டதாகவும் வடிவமைக்கின்றனர். கூடுதலாக நிலம் கையகப்படுத்தும் பணி எதுவும் தேவையில்லை என்பதால், போக்குவரத்து