தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ள ஆதவ் அர்ஜூனா – டெய்சி மார்ட்டின் தம்பதி, தங்களது திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு தனித்தனியாகப் பயணிக்க முடிவு செய்துள்ளனர். ஆதவ் அர்ஜூனாவுடனான 14 ஆண்டுகால வாழ்க்கைக்குப் பிறகு, அவரைப் பிரிவதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.