சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதல் வழித்தடப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, பாதுகாப்புச் சான்றிதழ் பெறப்பட்டு சுமார் 7 மாதங்கள் ஆகியும், பிரதமர் நரேந்திர மோடியின் திறப்பு விழா தேதிக்காகக் காத்திருப்பதால் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இந்த வழித்தடம் முடங்கிக் கிடக்கிறது. பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த உயர்நிலை வழித்தடத்தில் மொத்தம் 11 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 118.9 கிலோமீட்டர் நீளத்தில் மூன்று வழித்தடங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்தில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26.1 கிலோமீட்டர் கொண்ட நான்காவது வழித்தடத்தின் ஒரு பகுதியாக இந்த முதல்