சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு மாற்றாக, பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான புதிய மெட்ரோ வழித்தடத்தை பயணிகள் ஆர்வத்துடன் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த இந்த வழித்தடத்தில், முதல் நாளிலேயே பயணிகள் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக, வடபழனி மெட்ரோ நிலையத்திற்குச் செல்லும் நடைமேம்பாலத்திலும், நடைமேடையிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. ஒவ்வொரு ரயிலிலும் மூன்று பெட்டிகள் மட்டுமே இருப்பதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கூடுதலாக ஒரு பெட்டியாவது இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரத்தில், பயண நேரம் கணிசமாகக் குறைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேருந்தில் பயணித்த நிலையில், தற்போது 25 முதல் 30 நிமிடங்களில் வடபழனியை அடைய முடிவதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதற்கிடையே,