• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE : திமுகவின் முக்கிய முடிவு, சென்னையில் மழைக்கு வாய்ப்பு, இந்தியா-இலங்கை போட்டி; முக்கிய அப்டேட்ஸ்
Live Now

Tamil News LIVE : திமுகவின் முக்கிய முடிவு, சென்னையில் மழைக்கு வாய்ப்பு, இந்தியா-இலங்கை போட்டி; முக்கிய அப்டேட்ஸ்

Tamil News LIVE Updates : தமிழ்நாடு, இந்தியா, உலகம் என நம்மை சுற்றி நடக்கும் முக்கிய விஷயங்கள் குறித்து லைவ் அப்டேட்ஸ் ஆக இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Aug 23, 2026, 09:14 AM IST|Updated: Aug 24, 2026, 08:57 AM IST
joinshare
Tamil News LIVE : திமுகவின் முக்கிய முடிவு, சென்னையில் மழைக்கு வாய்ப்பு, இந்தியா-இலங்கை போட்டி; முக்கிய அப்டேட்ஸ்
Image Credit: Live Today | Screen grab
23 Aug 2026 19:40 IST (IST)
share

OTT Horror Movies: நெட்ஃபிளிக்ஸில் உள்ள த்ரில்லர் படம்!

OTT Horror Movies: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் உள்ள ஒரு திரில்லர் படம் உங்களை சீட் நுனியில் உட்கார வைத்து அலற வைத்துவிடும். அது என்ன படம் என்பதைஇங்கே தெரிந்து கொள்ளுங்கள்  (மேலும் படிக்க)

23 Aug 2026 19:39 IST (IST)

விவசாயிகளுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு

Salem News : சேலம் மாவட்டத்தில் ஒரு நிலத்தை மட்டும் பதிவு செய்து விவசாய பதிவு எண் பெற விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  (மேலும் படிக்க)
 

23 Aug 2026 19:37 IST (IST)

திருச்சி மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு

வாழை விவசாயம் செய்யும் திருச்சி விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

23 Aug 2026 15:54 IST (IST)

அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த செய்தி

அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது; அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னரே அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. 8-வது ஊதியக் குழு நடைமுறைக்கு வரும் வரை, 7-வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி உயர்வு தொடரும்... (மேலும் படிக்க)

23 Aug 2026 15:16 IST (IST)

EPFO ஊழியர் பதிவு முகாம் 2026

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), நிறுவனங்கள் மற்றும் பணியமர்த்துபவர்களுக்காக 'ஊழியர் பதிவு முகாம் 2026' (Employees’ Enrollment Campaign 2026) என்ற சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.... (மேலும் படிக்க) 
 

23 Aug 2026 14:47 IST (IST)

Postpartum Psychosis என்றால் என்ன?

Postpartum Psychosis: அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண், தன் கையால் மூன்று குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்காக வாதிடும் அவருடைய வழக்கறிஞர்கள், அவருக்கு postpartum psychosis இருப்பதாக வாதிடுகின்றனர். அதற்கு அர்த்தம் என்ன? இதோ முழு விவரம்! (மேலும் படிக்க)

23 Aug 2026 13:49 IST (IST)

தமிழ்நாடு மின்தடை

தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 24) திங்கள்கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)

23 Aug 2026 13:48 IST (IST)

UPSC EPFO Recruitment 2026

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) 80 உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (APFC) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது.... (மேலும் படிக்க)

23 Aug 2026 12:49 IST (IST)

இன்றைய முதல்வர்..நாளைய பிரதமர்!

சேரன்மாதேவியில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தென்காசி மாவட்ட தவெக அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையா, விஜய்யை இன்றைய முதல்வர் என்றும், நாளைய பிரதமர் என்றும் பேசியிருக்கிறார். 

23 Aug 2026 12:46 IST (IST)

காக்கிநாடா கல்லூரியில் கலவரம்

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில், காணாமல் போன அலைபேசி தொடர்பான தகராறு, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் தெலுங்கு பேசும் மாணவிகளுக்கும் இடையிலான மோதலாக மாறியது. கைகலப்பைத் தொடர்ந்து, நிலைமை முற்றி, மாணவிகள் தாக்குதல் நடத்த தடிகள் மற்றும் செருப்புகளைப் பயன்படுத்தும் அளவுக்குச் சென்றது.... (மேலும் படிக்க)

23 Aug 2026 12:28 IST (IST)

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!

AAI Recruitment 2026 : இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூடிவ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

23 Aug 2026 11:25 IST (IST)

டாக்ஸிக் பட விழாவில் விபத்து!

 யாஷ் நடிப்பில், விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் டாக்ஸிக். இந்த திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

23 Aug 2026 10:59 IST (IST)

ஒன்றரை நாளில் முடிந்த டெஸ்ட்!

ஆஸ்திரேல்யா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, ஒன்றரை நாளில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில், 64 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன வங்கதேச அணி, 2வது இன்னிங்ஸில், 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸிலேயே ஆஸ்திரேலிய அணி 210 ரன்கள் எடுத்திருந்த நிலைஇல், 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. 

23 Aug 2026 10:19 IST (IST)

விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்குமார்!?

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகரான அஜித் குமார், பைக் பந்தையத்தில் கலந்து கொண்ட போது விபத்தில் சிக்கி இருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். (மேலும் படிக்க)

23 Aug 2026 09:46 IST (IST)

8வது ஊதியக் குழு முக்கிய அப்டேட்

பாதுகாப்புத் துறை ஊழியர்களின் கூட்டமைப்பான 'பாரதிய பிரதிரக்ஷா மஸ்தூர் சங்' (BPMS), 8-வது மத்திய ஊதியக் குழுவின் (CPC) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 72,000 வழங்கப் பரிந்துரைத்துள்ளது.... (மேலும் படிக்க)

23 Aug 2026 09:45 IST (IST)

TN Government Employees

'தமிழ்நாடு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்' (TAPS) கீழ் அனுமதிக்கப்படும் இடைக்கால மாதத் தொகை மற்றும் குடும்பத் தொகைக்கான 'அகவிலை நிவாரண' (DR) விதிமுறைகளைத் தமிழ்நாடு அரசு திருத்தியுள்ளது.... (மேலும் படிக்க)

23 Aug 2026 09:29 IST (IST)

’திமுக அரசியலை விட்டு விலகும்!’

மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார், 2 ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டு விலகி அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடும் நிலை வரும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

23 Aug 2026 09:29 IST (IST)

அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு!

சட்டமன்றத்தில் திமுகவினர் தேவையின்றி கூச்சலிடுவதாகவும், அறநிலையத்துறை அறிவிப்புகள் குறித்து திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்வதாகவும் திமுகவினர் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

23 Aug 2026 09:23 IST (IST)

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

23 Aug 2026 09:22 IST (IST)

திமுக எடுத்த முக்கிய முடிவு!

திமுகவில், சமீபத்தில் வெளிவந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த அவசர செயற்குழுக்கூட்டத்தில் முக்கியமான முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.  (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

2

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

3

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

4

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

5

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil News LIVE Updates : ஆகஸ்ட் 23ஆம் தேதியான இன்று, தமிழகம், இந்தியா, உலகம் என அனைத்து பிரிவுகளிலும் என்னென்ன முக்கியமான விஷயஙள் நடக்கின்றன என்பதை இங்கு சுருக்கமாக லைவாக தெரிந்து  கொள்ளலாம்.

முதாலவதாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல, நேற்றைய செயற்குழு கூட்டத்தில் திமுக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இந்தியா-இலங்கை மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இன்று தொடங்குகிறது.