Tamil News LIVE : முதலமைச்சர் விஜய் தாராபுரம் பிரச்சாரம், சொத்து வரி செலுத்த கடைசி நாள் - இன்றைய முக்கிய செய்திகள்
Tamil News LIVE Updates : முதலமைச்சர் தாராபுரம் பிரச்சாரம், சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil News LIVE Updates : இடைத்தேர்தலையொட்டி தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் இன்று தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம். அவரது வருகையையொட்டி கோயம்புத்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாளாகும். இதுதவிர இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.....
30 Sep 2026 15:32 IST
LNG vs Hydrogen Trains
ரயில்வே சோதனைகளின் தரவுகள், LNG-யின் பயன்பாடு டீசல் நுகர்வை சுமார் 40 சதவீதம் வரை குறைக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. இது எரிபொருள் செலவைக் குறைப்பதோடு, கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் நுண்துகள்கள் (particulate matter) போன்ற மாசுபடுத்திகளின் வெளியேற்றத்தையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... (மேலும் படிக்க)
30 Sep 2026 13:21 IST
தமிழ்நாடு மின்தடை
Tamil Nadu Power Cut October 01: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 01, வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
30 Sep 2026 12:45 IST
தேர்தல் ஆணையம் முடிவு
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் (SIR) பணி தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இனி 'படிவம்-6'-உடன் கூடுதல் உறுதிமொழிப் படிவமான 'இணைப்பு-D' (Annexure-D) சமர்ப்பிக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.... (மேலும் படிக்க)
30 Sep 2026 12:11 IST
Tamil News LIVE : ரேஷன் அட்டைகள் முடக்கம்
6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் பொருட்கள் நாளை (அக்டோபர் 1) முதல் முடக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கார்டு முடக்கப்படாமல் இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)
30 Sep 2026 12:09 IST
Tamil News LIVE : மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
30 Sep 2026 11:40 IST
ITBP விளையாட்டு ஒதுக்கீட்டுப் பணி நியமனம் 2026
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP), விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 126 கான்ஸ்டபிள் (பொதுப் பணி) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. இதற்கான காலிப்பணியிட விவரங்கள், தகுதி வரம்புகள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு நடைமுறை மற்றும் ஊதியம் ஆகியவை குறித்த விவரங்களை இங்கே காணலாம்.. (மேலும் படிக்க)
30 Sep 2026 10:51 IST
CM விஜய் இன்று தாராபுரத்தில் பிரச்சாரம்
முதல்வர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்காக, தாராபுரம் - உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள கொண்டரசம்பாளையம், மாருதி நகரில் 54 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. அவர் பேசுவதற்கான மேடையாகப் பயன்படுத்தப்படவுள்ள பேருந்து ஒன்று கூட்டரங்கின் அருகே நிறுத்தப்பட்டுள்ளது... (மேலும் படிக்க)
30 Sep 2026 09:42 IST
Tamil News LIVE: கோவையில் போக்குவரத்து மாற்றம்
முதல்வர் விஜய் இன்று (செப்.30) தாராபுரத்தில் மேற்கொள்ள இருப்பதால், கோவை மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை பயணிகள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
30 Sep 2026 09:41 IST
அஞ்சல் துறை ஊழியர்களின் 2 கோரிக்கைகள்
ஏழு அஞ்சல் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'அஞ்சல் ஊழியர்களின் கூட்டு மன்றம்' (JCPE), தகுதியுள்ள ஊழியர்களுக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான PLB தொகையை அக்டோபர் 17-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, செப்டம்பர் 26 அன்று அஞ்சல் துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளது.... (மேலும் படிக்க)
30 Sep 2026 09:25 IST
தூத்துக்குடி வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்கலாம்!
Tamil Nadu Government Jobs 2026: தூத்துக்குடியில் மகளிர் திட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
30 Sep 2026 09:23 IST
தமிழ்நாடு அரசின் ஜாக்பாட்: ரூ.5 லட்சம் வரை உதவித்தொகை
Tamil Nadu Government : Swiggy, Zomato உள்ளிட்ட டெலிவரி வேலை செய்யும் கிக் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் பல்வேறு உதவித்தொகை விவரங்கள் மற்றும் அவற்றை எப்படி பெறுவது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
30 Sep 2026 09:22 IST
ரூ.25 லட்சம் கடனுதவி - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
Tamil Nadu Government TABCEDCO Loan : தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் டாப்செட்கோ (TABCEDCO) மூலம் குறைந்த வட்டியில் தொழில் கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. (மேலும் படிக்க)
I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.