SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. அக்வான் புயல்! வாங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Tamil News LIVE Updates: தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது போன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ நியூஸுடன் இணைந்திருங்கள்!

Written By R Balaji
Published: Nov 12, 2026, 09:58 AM IST | Updated: Nov 12, 2026, 03:18 PM IST
Join

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை முன்னிட்டு இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. 14 மாவட்டங்களுக்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது புயலாக வலுப்பெற்றால், அக்வான் என பெயரிடப்படும். 
 

12 Nov 2026 14:51 IST

மக்களின் அன்றாட செலவில் புதிய சுமை... பால் விலை உயர்ந்தது

இந்தியாவின் முன்னணி பால் நிறுவனங்களான அமுல் மற்றும் மதர் டெய்ரி, நவம்பர் 12 முதல் பால் விலையை லிட்டருக்கு ₹2 முதல் 4 வரை உயர்த்தியுள்ளன. தீவனச் செலவு, பேக்கேஜிங் செலவு மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களின் மாதாந்திர குடும்ப பட்ஜெட்டில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விரிவாக அறிந்து கொள்ள.. (மேலும் படிக்க)
 

12 Nov 2026 13:42 IST

Madurai Crime News : மதுரையில் 500 சவரன் நகைகள் கொள்ளை

மதுரை பைபாஸ் பகுதியில் உள்ள டாடாவின் தனிஷ்க் நகைக் கடையில் இன்று அதிகாலை, ரூ.50 கோடி மதிப்புள்ள 500 சவரன் தங்க நகைகள் கொள்ளை (மேலும் படிக்க)

12 Nov 2026 13:31 IST

Kandha Sashti News: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. (மேலும் படிக்க)

 

12 Nov 2026 13:13 IST

TN Government: ரூ.52.05 கோடி மதிப்பீட்டில் டெண்டர் வெளியீடு

2027-28 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தேவையான நலத்திட்டப் பொருட்களை உரிய நேரத்தில் விநியோகிப்பதற்கான முன்னேற்பாட்டை அரசு தொடங்கியுள்ளது. இதன் ஒரு அங்கமாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக காலணிகள், காலுறைகள், மழைக்கோட்டுகள் மற்றும் கம்பளி ஸ்வெட்டர்களை வாங்குவதற்கு, மொத்தம் ரூ. 52.05 கோடி மதிப்பிலான நான்கு ஒப்பந்தப்புள்ளிகளை (tenders) தமிழ்நாடு அரசு கோரியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன... (மேலும் படிக்க)

12 Nov 2026 13:04 IST

தமிழ்நாடு மின்தடை

தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (நவம்பர் 13) மின் பராமரிப்பி பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  (மேலும் படிக்க)
 

12 Nov 2026 13:01 IST

New COVID Variant PJ.2.1: புதிய கொரோனா PJ.2.1 பரவல்

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா PJ.2.1 வைரியண்ட் சுகாதாரத் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது. WHO கண்காணிப்பில் உள்ள இந்த புதிய COVID-19 வகையின் அறிகுறிகள், பரவும் விதம் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள... (மேலும் படிக்க)

12 Nov 2026 12:33 IST

RBI News: வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு RBI புதிய அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய உள்நாட்டு பணப் பரிமாற்ற விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. BC, ATM மற்றும் NEFT மூலம் பணம் அனுப்புவதற்கான புதிய வரம்புகள், KYC நடைமுறைகள் மற்றும் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு பொருந்தும் விதிகள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள.. (மேலும் படிக்க)

12 Nov 2026 12:32 IST

Jobs Update: சென்னை துறைமுக ஆணைய வேலைவாய்ப்பு

சென்னை துறைமுக ஆணையம் (ChPA), செயலாளர் (துறைத் தலைவர் - HoD) பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 24 டிசம்பர் 2026 ஆகும். விண்ணப்பதாரர்கள் chennaiport.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்... (மேலும் படிக்க)

12 Nov 2026 12:08 IST

India News: திமுக காங்கிரஸ் கூட்டணி

கருணாநிதி உடனான நட்பு குறித்து சுவாரஸ்ய தகவலைகளை சோனியா காந்தி தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். மேலும், திமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். (மேலும் படிக்க)
 

12 Nov 2026 11:51 IST

EPS Pension: நவம்பர் 19 EPFO CBT முக்கிய கூட்டம்

தற்போது ரூ.1,000 ஆக உள்ள இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் உள்ளன. எனினும், தற்போதுள்ள அதிகபட்ச மாத ஓய்வூதிய வரம்பே ரூ.7,500 ஆக உள்ளதால் இந்த கோரிக்கை நிறைவேற வாய்ப்பில்லை. மத்திய அரசும் EPFO-வும் இபிஎஸ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்... (மேலும் படிக்க)

12 Nov 2026 11:49 IST

Jammu Kashmir: 2 சிறப்புக் காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர டச்சான்-மார்வா (Dachhan-Marwah) பகுதியில், பணியில் இருந்தபோது காணாமல் போன இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகளின் (SPOs) உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களைக் கண்டறிய காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்... (மேலும் படிக்க)

12 Nov 2026 10:53 IST

TN Govt Job: தமிழ் ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் வேலை

அயல்நாடுகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் பணிக்கு மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது (மேலும் படிக்க)

12 Nov 2026 10:03 IST

மாஜி அமைச்சர் சிவசங்கர் மீது மோசடி புகார்!

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் ரூ.3.35 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது மோசடி புகார் எழுந்து அவர் கைதான நிலையில், தற்போது சிவசங்கர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (மேலும் படிக்க)
 

12 Nov 2026 10:01 IST

இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES