நேபாளத்தின் அமைதியான திரிசூலி பள்ளத்தாக்கு. வழக்கம்போல திரிபுவன் மேல்நிலைப் பள்ளியில் வகுப்புகள் பரபரப்பாகத் தொடங்குகின்றன. திடீரென இமயமலையின் லங்டாங் சிகரத்தில் ஒரு பிரம்மாண்ட பனிப்பாறை உடைந்து விழுகிறது. யாரும் எதிர்பாராத அந்த நொடியில், ராட்சச காட்டாற்று வெள்ளம் மலையடிவாரத்தை நோக்கி சீறிப்பாய்கிறது.காலை 9:20 மணி. பள்ளி முதல்வர் ராஜேந்திர தவாடிக்கு ஒரு போன் கால் வருகிறது. மறுமுனையில் பேசிய நண்பன் அலறுகிறான்—ராஜேந்திரா, ஆற்றுக்கு மேல இருந்த கிராமங்கள் எல்லாம் அடிச்சுட்டு போயிடுச்சு... தண்ணி உங்க பள்ளியை நோக்கி வருது, உடனே ஓடிடுங்க!சுற்றிலும் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகள்... வெளியே பார்த்தால் ஆறு 60 அடி கீழே இருக்கிறது; ஆனால் நீர்மட்டம் சில நொடிகள் இடைவெளியில் அசுர வேகத்தில் ஏறிக்கொண்டே வருகிறது. யோசிக்க நேரமில்லை, ஒரு நொடி பிசகினாலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்படும்!ராஜேந்திரா துளியும் தாமதிக்காமல் பள்ளியின் அபாய மணியை இடைவிடாமல் அடிக்கிறார். ஆசிரியர்கள் வகுப்பறைகளிலிருந்து குழந்தைகளை வெளியேற்றுகிறார்கள். பயத்தில் பல குழந்தைகள் உறைந்து போய் அழுகிறார்கள்; ஒரு சிறுமிக்கு நெஞ்சு படபடத்து மயக்கம் வருகிறது, அவளை உடனடியாக ஒரு பைக்கில் ஏற்றி மலை உச்சிக்கு அனுப்புகிறார்கள்.மீதமுள்ள 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விரல் பிடித்து, மலை உச்சியை நோக்கி ஓடுங்கள்! என்று அவசரப்படுத்துகிறார் ராஜேந்திரா. கடைசி குழந்தையும் மலையின் மேடான போதி மரத்தடிக்குச் சென்று சேர்ந்த அடுத்த ஐந்தாவது நிமிடம்... ஒரு பயங்கர இடி முழக்கத்தோடு வந்த வெள்ளம், அந்த மூன்று மாடி கான்கிரீட் பள்ளிக்கூடத்தை சுக்குநூறாக உடைத்து இழுத்துச் சென்றது!
நேபாளத்தில் மிகப்பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய வெள்ளப் பேரிடருக்கு அண்டைநாடான சீனாதான் காரணமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்ட அன்று பள்ளியில் இருந்து 1,643 குழந்தைகளின் உயிரையும், சாமர்த்தியமாக உடனே எடுத்த முடிவால் ஒரு ஆசிரியர் காப்பாற்றியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
Fertility Rates Explained: உலக நாடுகள் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை கையில் எடுத்துள்ளனர். இந்த லிஸ்டில் இந்தியாவும் இணைந்துள்ளது. குறிப்பாக, தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு குறைந்து வருவதால், மாநில அரசு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.
நேபாளத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் காதணியை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர் காதணியை திருடும் 41 வினாடி வீடியோவும் இணையத்தில் வைரலானது.
நேபாள பெருவெள்ளம் திடீரென ஏற்பட என்னவெல்லாம் காரணங்கள் இருக்கும்...? நேபாள பெருவெள்ளம் காரணமாக இந்தியாவின் பீகார், உத்தர பிரதேசத்தில் எச்சரிக்கை ஏன்...? உள்ளிட்டவை குறித்து விரிவாக இங்கு காணலாம்.
Nepal Flash Floods : நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியதில் இதுவரை 157 பேரின் உடலை நேபாள போலீசார் கைப்பற்றினர். நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் காணாமல் போயுள்ளனர்.
Pakistan Fire Accident : பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் இன்று (ஆக. 26) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் AIயிடம், மனிதர்கள் கடந்த சில நாட்களாகவே ரொம்ப சார்ந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படியே சென்றால் இன்னும் சில வருடங்களில் என்ன ஆகும் என்பது குறித்து சில ஆய்வுகள் வெளியாகின்றன.
Michiel Vandeweerst எனும் 28 வயது இன்ஃப்ளூவன்ஸர், பல வருடங்களாக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், சிறையிலேயே இறந்து விட்டதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.
China Maglev Train Speed Record: சீனாவில் நடந்த சோதனை ஓட்டத்தில், Maglev காந்த மிதப்பு ரயில் 5.3 வினாடிகளில் மணிக்கு 800 கி.மீ., வேகத்தை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதன் தொழில்நுட்பம், பயன்பாடு மற்றும் பிற விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.