அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த எட்டு மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 23 காசுகள் என்ற நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக, நடப்பு நிதியாண்டில் ரூபாய் சந்தித்திருந்த சரிவுகள் அனைத்தையும் இந்த அதிரடி உயர்வு ஈடுகட்டியிருப்பது பொருளாதார வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால் மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, இந்தியப் பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள வலுவான ஏற்றம். இரண்டாவதாக, இந்தியச் சந்தைகளில் அந்நிய முதலீடுகள் மீண்டும் அதிகரித்திருப்பது. மூன்றாவதாக, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் வலிமையை அளவிடும் டாலர் குறியீடு சரிவடைந்திருப்பது. இந்த மூன்று காரணிகளும் ஒன்றிணைந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், இந்தியப் பங்குச்சந்தைகளும்