நாட்டின் 80-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், முதல் முறையாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்கிறார். இதனால் இந்த ஆண்டு சுதந்திர தின விழா தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.