சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோமீட்டர் நீளத்தில் சிவப்பு வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 45 நிலையங்களைக் கொண்ட இந்த வழித்தடத்தில், 6 சுரங்கப்பாதை நிலையங்களும், 39 உயர்மட்ட நிலையங்களும் இடம்பெறுகின்றன.
இதில், கோயம்பேடு முதல் சென்னை வர்த்தக மையம் வரையிலான தண்டவாளப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. வர்த்தக மையத்தைக் கடந்த ஆலந்தூர் வரையிலான 5 கிலோமீட்டர் பகுதியில், இதுவரை சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளை 45 நாட்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ திட்ட இயக்குநர் டி. அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.
பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் உள்நாட்டு சோதனை