பூந்தமல்லி அருகே திருமழிசை, ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டடார். அவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருமழிசை பேரூராட்சி பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மருந்து தெளிப்பதாகக் கூறி, பாதிப்பு இல்லாத இடங்களில் மேலோட்டமாகப் பணிகளை மேற்கொண்டு கணக்குக் காட்டுவதற்காக மட்டுமே ஊழியர்கள் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிறுவனின் உயிரிழப்பைத் தொடர்ந்து, திருமழிசை பேரூராட்சி நிர்வாகம் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, சுகாதாரச் சீர்கேட்டைச் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள்