தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் தவெகா-வின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க ரூபாய் 70 கோடி வரை செலவு செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இது குறித்து தெரிவித்தார். திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அதிக பணம் வைத்துள்ளதால் பதவியை பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சி காலங்களில் பதவிகள் விற்கப்பட்டன என்றும், ஒவ்வொரு பதவிக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வாங்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சத்தை ஒழிக்க சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சி நடைபெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர், திமுகவும், அதிமுகவும்