மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதோடு நின்றுவிடவில்லை... ரஷ்யா-உக்ரைன் மோதலால் ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் ஜசான் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு, மத்திய கிழக்கில் சில சுத்திகரிப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது என அடுத்தடுத்த சிக்கல்கள் உருவாகியுள்ளன, இதன் விளைவாக, கச்சா எண்ணெயை விட, சுத்திகரிக்கப்பட்ட டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் சந்தையே இப்போது அதிக அழுத்தத்தில் இருக்கிறது. ரஷ்யாவின் அடுத்த அதிரடி உள்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ரஷ்யா பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏற்கனவே உலக சந்தையில் டீசல் கையிருப்பு குறைந்துள்ள