தங்கம் விலை கடந்த சில நாட்ககளாகவே ஏற்றத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்பட்டது, காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.