ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வரும் ஆவணி அவிட்ட நன்னாளின் சிறப்புகள் மற்றும் ஹயக்கிரீவர் அவதாரப் பின்னணியை இந்த வீடியோவில் பார்க்கலாம். பிரம்மதேவரிடம் படைப்புத் தொழிலுக்காக வழங்கப்பட்ட நான்கு வேதங்களை மது, கைடபர் என்ற அசுரர்கள் திருடிச் சென்று கடலில் மறைத்து வைத்தபோது, மகாவிஷ்ணு குதிரை முகமும் மனித உடலும் தாங்கி ஸ்ரீ ஹயக்கிரீவராக அவதரித்து அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டு மீண்டும் பிரம்மனுக்கு உபதேசித்தார். அந்த அற்புத நாளே ஆவணி அவிட்டமாகப் போற்றப்படுகிறது. இது பூணூல் மாற்றுபவர்களுக்கு மட்டுமின்றி, கல்வி மற்றும் ஞானத்தின் அதிபதியான ஹயக்கிரீவரின் அருளால் அனைத்து மாணவர்களுக்கும் மிகச் சிறந்த நாளாக விளங்குகிறது. இந்நாளில் நினைவாற்றல் பெருக 'ஞானானந்தமயம் தேவம்...' ஸ்லோகத்தையும், ஹயக்கிரீவர் காயத்ரி