பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தனியாமங்கலத்தில் உள்ள சொந்த வீட்டில் தாய் சந்தியா தனது மகள், மற்றும் மகன் முத்துச்செல்வம் ஆகியோருடன் வசித்து வருகின்றார். சிறுவன் முத்துச்செல்வம் தனியாமங்கலம் அருகே வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் வீட்டின் அருகே மதியம் விளையாட செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். மாலை வரை சிறுவன் வீடு திரும்பாததால், சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் காவல்துறை உதவியுடன் அப்பகுதி முழுவதும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இன்று ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட இருந்த நிலையில், இன்று அதேபகுதியில் உள்ள பாழடைந்த