சென்னை விமான நிலையத்தின் எதிர்கால விரிவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கப்போகிறது ஐந்தாவது முனையம் எனப்படும் டெர்மினல் 5! இரண்டு ஓடுபாதைகளுக்கு இடையில் அமையத் திட்டமிடப்பட்டுள்ள இந்த முனையம், ஆண்டுக்கு 2 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. மூன்றாவது முனையத்துடன் இணைந்து, விமான நிலையத்தின் மொத்த பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 5 கோடியே 50 லட்சமாக உயர வாய்ப்புள்ளது. இந்த விரிவாக்கத்திற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த, மெட்ரோ ரயில், மோனோ ரயில் மற்றும் உயர்மட்டச் சாலை ஆகிய திட்டங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக 15.46 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதில்