நடிகர் ரவி மோகன் மற்றும் Finance with Harish தொடர்பான விவகாரங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தன்னையும் குறிவைத்து சைபர் புல்லியிங் நடைபெறுவதாக இளம் தொழிலதிபர் பார்த்திபன் கே. புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இளம் தொழிலதிபரான பார்த்திபன் கே., தனது தொழில் நிறுவனம் மற்றும் தனிப்பட்ட நற்பெயரைப் பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள், படங்கள் உள்ளிட்ட உள்ளடக்கங்கள் வெளியிடப்படுவதாகப் புகாரில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, Instagram உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாகத் தன்னை குறிவைத்து உள்ளடக்கங்கள் பரப்பப்படுவதாகவும், இதனால் தனது தொழில் மற்றும் வணிகச் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகள் தனது