பெண் அரசு ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் நிலையில், ஆண் ஊழியர்களுக்கும் மகப்பேறுகால விடுப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் முன்வைக்கப்பட்டது. குழந்தை பிறக்கும் காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவை வழங்கவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமணமான ஆண் அரசு ஊழியர்கள் தங்கள் மனைவியின் பிரசவக் காலத்தில் உடனிருக்க, குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்போ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு உள்ளாகவோ இந்த 15 நாட்கள் விடுப்பை எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது