விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்த அன்புராணி என்பவருக்கும், அவரது கணவர் ராமச்சந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்கின்றனர். அன்புராணி தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். ராமச்சந்திரன் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததால், அன்புராணி விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தில் இருமுறை புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இன்று டவுன் காவல் நிலையம் அருகே அன்புராணி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த ராமச்சந்திரன் கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவர் முகத்தில் வீசினார். இதில் அன்புராணி அலறித் துடித்தார். அப்போது அருகில் நடந்து சென்ற கிருஷ்ணமூர்த்தி என்ற முதியவர் மீதும் ஆசிட் சிதறியதில் இருவருமே காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவலறிந்த நகரப் போலீசார் இருவரையும்