சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது உலக முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தீவிரமாகத் திரும்பியுள்ள நிலையில், சில்லறை வர்த்தகத்திலும், சர்வதேச சந்தையிலும் இரு உலோகங்களின் மதிப்பும் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றன. தற்போதைய சந்தை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயைத் தாண்டி வர்த்தகமாகி வரும் வேளையில், சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,656 டாலரைக் கடந்துள்ளது. எம்சிஎக்ஸ் (MCX) சந்தையிலும் பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்த ஒரே மாதத்தில் மட்டும் தங்கம் 15 சதவீதமும்,