• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE: மாணவர்களுக்கு கேக் வழங்கினார் முதல்வர் விஜய்.. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி! NZ vs IND 4th ODI
Live Now

Tamil News LIVE: மாணவர்களுக்கு கேக் வழங்கினார் முதல்வர் விஜய்.. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி! NZ vs IND 4th ODI

Tamil News LIVE Updates: குழந்தைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் இன்று மாணவர்களுக்கு கேக் வழங்குகினார். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது போன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் செய்தியுடன் இணைந்திருங்கள்.

Written ByR Balaji
Published: Nov 13, 2026, 09:30 IST|Updated: Nov 19, 2026, 14:36 IST
joinshare
Tamil News LIVE: மாணவர்களுக்கு கேக் வழங்கினார் முதல்வர் விஜய்.. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி! NZ vs IND 4th ODI
13 Nov 2026 16:01 IST
share

Chennai Draft Voter List 2027: 21,403 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்

2027-ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் (SSR) கீழ், சென்னையின் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் சிறிய அளவிலான உயர்வு காணப்படுகிறது. சென்னையின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 29.14 லட்சமாக உயர்ந்துள்ளது... (மேலும் படிக்க)

13 Nov 2026 15:28 IST

புது E-Voucher திட்டம் Explained: ரேஷன் கடையில் இனி QR Code தான்!

இனி ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை கிடைக்காதா? பணமா கொடுப்பாங்களா? இல்ல QR கோடு வவுச்சரா? மத்திய அரசு கொண்டு வரப்போகும் புதிய 'ஈ-ருப்பி' (e-RUPI) ரேஷன் திட்டம் குறித்த A to Z - Explained... (மேலும் படிக்க)

13 Nov 2026 15:08 IST

Nvidia Jensen Huang Controversy: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

என்விடியா முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், நிறுவனத்துடன் தொடர்புடைய மூன்றாவது பெண்ணுடன் உறவு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஒரு அறிக்கை அதிர்ச்சியை அளித்துள்ளது. இதன் காரணமாக என்விடியாவின் தலைமைத்துவ நெருக்கடி மேலும் ஒரு திருப்பத்தை எடுத்துள்ளது. ஒரு சீனப் பெண் தொழிலதிபர் மற்றும் என்விடியாவின் மூத்த நிர்வாகி ஒருவருடன் அவருக்கு இருந்ததாகக் கூறப்படும் உறவுகள் குறித்த ஆய்வுகளுக்கு மத்தியில் இந்த சமீபத்திய குற்றச்சாட்டு வந்துள்ளது. அதே நேரத்தில், முக்கியமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை சீனாவுக்கு மாற்றுவது குறித்த சாத்தியமான விசாரணைகளும் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன... (மேலும் படிக்க)

13 Nov 2026 13:39 IST

Retail Inflation News: விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்

நாட்டிலேயே அதிக பணவீக்கம் பதிவான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஜனவரியில் 3.36% ஆக இருந்த பணவீக்கம், அக்டோபரில் 7.29% ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு, கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசியச் செலவுகள் அதிகரிப்பது சாமானியர்களை பெரிதும் பாதித்து வருகிறது. (மேலும் படிக்க)
 

13 Nov 2026 13:38 IST

TN Govt Scheme News: வெளிநாட்டில் தவிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள்

அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தில் மாணவர்களுக்கு நிதி வழங்குவதில் தாதமம் ஏற்படுவதால், அவர்கள் சிரமப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் முதல்வர் விஜய்க்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். (மேலும் படிக்க)
 

13 Nov 2026 13:25 IST

8th Pay Commission Update: 10 ஆண்டுகளில் பக்காவான சம்பள உயர்வு

8வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் எவ்வளவு உயரும்? ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? படிகளில் என்ன ஏற்றம் இருக்கும்? இந்த கேள்விகளுக்கான விடைகளைக் காணும் பணிகளிலும், ஊதிய உயர்வைக் கணக்கிடுவதிலும் ஊழியர்கள் அனைவரும் தற்போது ஈடுபட்டுள்ளனர்... (மேலும் படிக்க)

13 Nov 2026 12:25 IST

SBI Pension Loan New Rules 2026: எஸ்பிஐ ஓய்வூதியக் கடன் வட்டி உயர்வு

அடமானம் இல்லாமல் எஸ்பிஐ வங்கியில் ஓய்வூதியக் கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளீர்களா? வட்டி விகித உயர்வுக்குப் பிறகு உங்கள் வயது மற்றும் ஓய்வூதியத்திற்கு ஏற்ப எவ்வளவு கடன் கிடைக்கும், மாதத் தவணை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள... (மேலும் படிக்க)

13 Nov 2026 12:23 IST

SSR Voter List Draft: லிஸ்டில் உங்கள் பெயர் உள்ளதா, இல்லையா?

வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தத்தின் (SSR) ஒரு பகுதியாக, நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வியாழக்கிழமை அன்று வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்கவோ, நீக்கவோ அல்லது ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றைச் சரிசெய்யவோ காத்திருக்கும் நபர்களுக்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது... (மேலும் படிக்க)

13 Nov 2026 11:43 IST

Delhi Protest News: ஜனநாயகத்தைக் காக்க நவம்பர் 26 நாடு தழுவிய போராட்டம்

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மற்றும் SIR நடைமுறைக்கு எதிராக டெல்லி பிரஸ் கிளப்பில் போர்க்கொடி! அரசியலமைப்பு தினமான நவம்பர் 26 அன்று டெல்லி உட்பட நாடு முழுவதும் மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கவுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் அறிவித்துள்ளனர். (மேலும் படிக்க)

13 Nov 2026 10:51 IST

Chennai Metro | சென்னை மெட்ரோ புதிய அறிவிப்பு!

இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள திருமங்கலம் சொத்து மேம்பாட்டுத் திட்டம், 3.85 ஏக்கர் பரப்பளவில் நான்கு கட்டடக் கோபுரங்களைக் கொண்டதாக அமையவுள்ளதாக சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம். (மேலும் படிக்க)

13 Nov 2026 09:55 IST

Kandha Sashti News: திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

13 Nov 2026 09:48 IST

EPFO Joint Declaration: பிழைகளை ஆன்லைன், ஆஃப்லைன் முறைகளில் திருத்துவது எப்படி?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), கணக்கு வைத்திருப்பவர்களுக்காக 'கூட்டு அறிவிப்பு' (Joint Declaration) எனும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி இந்த பணிகளுக்கு நீங்கள் மீண்டும் மீண்டும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்ல. மாறாக, வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் உங்கள் ஆவணங்களில் உள்ள பிழைகளைச் சரிசெய்து கொள்ளலாம்... (மேலும் படிக்க)

13 Nov 2026 09:47 IST

Microsoft Outage: அவுட்லுக், டீம்ஸ், கோபைலட் சேவைகள் பாதிப்பு!

மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளாவிய அளவில் பெரும் தொழில்நுட்ப முடக்கத்தைச் சந்தித்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான பயனர்கள் அவதியில் உள்ளனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளில் ஏற்பட்டுள்ள பெரும் முடக்கம் காரணமாக, அவுட்லுக் (Outlook), மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Teams), கோபைலட் (Copilot) மற்றும் பிற Microsoft 365 அம்சங்கள் பாதிக்கப்பட்டுள்ளன... (மேலும் படிக்க)

13 Nov 2026 09:33 IST

இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கான இன்றைய பலன்களை தெரிந்துக்கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

13 Nov 2026 09:31 IST

தவெக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் புகார்!

கோவை காரமடையில் தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இணங்க மறுத்ததால் சாதிப் பெயரைச் சொல்லி திட்டி மிரட்டுவதாகவும் அக்கட்சியின் பெண் நிர்வாகி பரபரப்புப் புகார் அளித்துள்ளார். (மேலும் படிக்க) 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

2

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

3

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

4

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

5

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னை பெரம்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற உள்ள விழாவில் முதல்வர் விஜய் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு இன்று (நவம்பர் 13) கேக் வழங்கினார். பொங்கல் திருநாளுக்கான ரயில் டிக்கெட் முனபதவு இன்று தொடங்குகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. நியூசிலாந்து - இந்தியாவுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.