ஆந்திர மாநிலம் கங்குந்தி ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த 1-ம் தேதி அன்று வனவர் பாபாஜான் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு புதியதாக குழி தோண்டப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதை கண்டுள்ளார். இது குறித்து வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குப்பம் தாசில்தார் ரமேஷ்பாபு, குப்பம் காவல் ஆய்வாளர் ஜி.டி. நாயுடு உள்ளிட்ட அதிகாரிகள் அருகில் உள்ள கிராம மக்களின் உதவியுடன் குழியை தோண்டி பார்த்தபோது அதில் புதைக்கப்பட்டிருந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது. மேலும் சடலத்தை மீட்டு சோதனை செய்தபோது அவரது சட்டை பாக்கெட்டில் நகை அடகு வைக்கப்பட்டிருந்த நகை கடை ரசீதை போலீசார் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை குப்பம்