தமிழகத்தில் தற்போதைய ஆட்சியால் வாக்களிக்காதவர்கள் மட்டுமல்லாது, வாக்களித்த மக்களுமே புலம்பும் சூழல் உருவாகியுள்ளது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் விலைவாசி உயர்வு, நிர்வாகச் சீர்கேடு, மின்தடை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அன்றாடச் செய்திகளாகிவிட்டன என்று அவர் சாடினார். போதைப்பொருள் புழக்கமும் குற்றங்களும் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆறு மாதம்கூடத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் செல்லும் இந்த அநியாய ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க மக்கள் மற்றும் கட்சியினர் தயாராக வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.